முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 5 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
கந்திகுப்பம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே வரட்டனப்பள்ளி பகுதியில், முன்னாள் ராணுவ வீரர் ஜீவரத்தினத்தின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
ஜீவரத்தினம் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த சமயத்தில், மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து 5 பவுன் தங்கம் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துள்ளனர். சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
