தெருநாய்கள் கடித்ததில் மான், 4 ஆடுகள் உயிரிழப்பு
வேப்பனப்பள்ளி பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் மான் ஒன்றும், 4 ஆடுகளும் உயிரிழந்தன.

வேப்பனப்பள்ளி அருகே கொங்கனப்பள்ளி காப்புக்காட்டில் இருந்து வந்த மான் ஒன்றை, தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் அது உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், பெத்ததாளப்பள்ளியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆண்டியப்பனின் 9 செம்மறி ஆடுகளை நாய்கள் கடித்ததில், 4 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 2 ஆடுகள் பலத்த காயமடைந்தன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
