ஆட்டோக்களுக்கு புதிய பர்மிட் வழங்கத் தடை கோரி மனு
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஆட்டோக்களுக்கு புதிய பர்மிட் வழங்கத் தடை கோரியும், பிற கோரிக்கைகள் குறித்தும் மனுக்கள் அளிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 346 மனுக்கள் பெறப்பட்டன.
அதில், கிருஷ்ணகிரியில் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, புதிய ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்கத் தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர். மேலும், சாலை விரிவாக்கப் பணியால் குடும்பங்கள் இடம்பெயரும் சூழல் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
