ETN News சமீபத்திய அப்டேட்கள்
Hosur · district

ஓசூர் சந்தைக்கு வரத்து குறைவு: முள்ளங்கி கிலோ ரூ.40-க்கு விற்பனை

ஓசூர் சந்தைக்கு முள்ளங்கி வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது.

ஓசூர் சந்தைக்கு வரத்து குறைவு: முள்ளங்கி கிலோ ரூ.40-க்கு விற்பனை

ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். பெங்களூரு, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து முள்ளங்கி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களாகச் சந்தைக்கு முள்ளங்கி வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்