கோவில்பாப்பாக்குடி புனித அந்தோனியார் சிற்றாலய முதலாமாண்டு விழா கொடியேற்றம்
மதுரை கோவில்பாப்பாக்குடியில் புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் முதலாமாண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

மதுரை கோவில்பாப்பாக்குடி பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் முதலாமாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அஞ்சல் நகர் அருகே அமைந்துள்ள இந்த சிற்றாலயத்தின் முதலாமாண்டு விழாவை சென்னை சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஜோசப் கென்னடி கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் புனித அந்தோனியார் திருவுருவம் தாங்கிய தேர் பவனி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 25-ம் தேதி மாலை நடைபெறும் விழா திருப்பலியை அருட்தந்தை ஆரோக்கியசாமி நிறைவேற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அருள்சேகர் தலைமையில் அருளகக் தந்தையர் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
