மேலூர் அருகே சிவாலயபுரத்தில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
மேலூர் அருகே உள்ள பைப்பட்டி சிவாலயபுரத்தில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பைப்பட்டி சிவாலயபுரத்தில் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கனார் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒரு பகுதியாக தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. வரும் 29-ம் தேதி ஆடித்தபசு விழா நடைபெற உள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
