நீட் தேர்வில் வேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள் 124 பேர் சாதனை
நீட் தேர்வில் வேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள் 124 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள வேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 600-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மொத்தம் 124 மாணவர்கள் இந்தச் சாதனையைச் செய்துள்ளனர். இதில் பள்ளி மாணவர் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும், மாணவர் சுடர் 696 மதிப்பெண்களுடன் 45-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
தேனி போதி பள்ளி மாணவி சவிதா அகில இந்திய தரவரிசையில் 82-வது இடத்தையும், மாநில அளவில் 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
