நெற்பயிரைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை
மதுரை மேற்கு வட்டாரத்தில் நெற்பயிர்களை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

மதுரை மேற்கு வட்டாரத்தில் அனல் காற்று மற்றும் நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களைப் பாதுகாக்க வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அரியூர், கீழநெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 80 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது நெற்பயிர்கள் பால் பிடிக்கும் தருணத்தில் உள்ளதால், பாக்டீரியா இலைக்கருகல் மற்றும் இலைப்பேன் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனை கட்டுப்படுத்த பிஎப்எம், காப்பர் ஹைட்ராக்சைடு மற்றும் வேப்பங்கொட்டைச் சாறு போன்ற மருந்துகளைப் பயன்படுத்தவும், முறையான தண்ணீர் நிர்வாகத்தைக் கையாளவும் வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
