மதுரை மாவட்டத்தில் 25 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு 25 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு 25 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இப்பதவி தற்காலிக அடிப்படையில் 6 மாத காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட அரசு வழக்கறிஞர்களாக பி.பாண்டி, கே.எம்.திருப்பதி ஆகியோரும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக எஸ்.கந்தசாமி, ஜி.தனலட்சுமி, ஆர்.ஷேக் அகமது உள்ளிட்ட பலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
