கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் ஜூலை 29-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் 18-ம் படி கருப்பணசாமி கோயிலில் படி பூஜைகள் நடைபெறும். திருவிழாவையொட்டி சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
தினமும் சுவாமி புறப்பாடு பல்வேறு வாகனங்களில் நடைபெறுகிறது. 11-ம் நாள் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஹரிஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
