பல்வேறு முக்கிய வழக்குகள் தொடர்பாக தினமும் புள்ளி விவரங்களைக் கேட்கும் அரசால் திணறும் போலீஸார்
தமிழக காவல்துறையில் பணியாளர் பற்றாக்குறை மற்றும் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அரசு கேட்கும் தினசரி புள்ளி விவரங்களை அனுப்புவதில் போலீஸார் திணறி வருகின்றனர்.

தமிழக காவல் துறையில் 1.35 லட்சம் பணியிடங்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 1.20 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஓய்வு மற்றும் தற்காலிகப் பணிநீக்கம் போன்ற காரணங்களால் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் தாமதமாவதால், பணியில் இருக்கும் போலீஸாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
தினமும் விஐபி பாதுகாப்பு, நீதிமன்றப் பணி, போராட்டங்கள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு என காவல்துறை பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, அரசு தரப்பிலிருந்து பல்வேறு முக்கிய புள்ளி விவரங்கள் தினமும் கேட்கப்படுவதால், அவற்றைச் சேகரித்து உடனுக்குடன் அனுப்புவதில் காவல்துறையினர் சிரமப்படுகின்றனர்.
குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறைக்கு துல்லியமான தகவல்களை வழங்க காவல்துறை நிலையங்களில் போதிய கணினி ஆப்ரேட்டர்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. இணைய சேவை மற்றும் சிசிடிவி கோளாறுகளால் தரவுகளை அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
