மதுரை அருகே 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
மதுரை அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் 2000 ஆண்டுகள் பழமையான 3 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பாப்பிநாயக்கன்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய 3 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈமக்காடாக இருந்திருக்கக்கூடிய இப்பகுதியில், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள் அதிக அளவில் சிதறிக் கிடக்கின்றன.
மதுரை இயற்கை அறக்கட்டளை மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில், பானைகளுக்குள் சிதைந்த நிலையில் எலும்புத் துண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் பண்டைய கால மக்களின் ஈமச் சடங்கு முறைகளை அறிய இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
