மதுரை தெப்பக்குளத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு
மதுரையில் ட்ரோன் மூலம் எல்இடி திரையை இணைத்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

மதுரை தெப்பக்குளம் மற்றும் வண்டியூர் பூங்கா பகுதிகளில், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தனியார் நிறுவனம் மூலம் ட்ரோன் கேமராக்கள் பொருத்தப்பட்ட எல்இடி திரை பயன்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் விவரங்களை கியூஆர் குறியீடு மூலம் எளிதாகப் பதிவேற்றுவது குறித்து விளக்கப்பட்டது. மேலும், முதல்கட்டமாக வரும் 31-ம் தேதி வரையிலும், இரண்டாம்கட்டமாக அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
