மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி பிரம்மோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வாக, சுந்தரராஜப் பெருமாள் - சௌந்தரவல்லித் தாயார் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கோபி மாதவன் தலைமையிலான ஆச்சாரியார்கள் சடங்குகளை நடத்தி வைத்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, இரவு பெருமாள் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மூலம்: ABP Nadu - Madurai
