மதுரை கே.கே.நகரில் பெரியார் தோரணவாயில் இடித்து அகற்றம்
உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கே.கே.நகர் பெரியார் தோரணவாயில் இடித்து அகற்றப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவையடுத்து, மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சுமார் 45 ஆண்டுகள் பழமையான கே.கே.நகர் பெரியார் தோரணவாயில் இடித்து அகற்றப்பட்டது.
1981-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக மதுரையின் நான்கு திசைகளில் தோரணவாயில்கள் அமைக்கப்பட்டன. தற்போது வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால், இத்தோரணவாயில்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாட்டுத்தாவணி மற்றும் கே.கே.நகர் தோரணவாயில்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கே.கே.நகரில் உள்ள தோரணவாயிலை அகற்றும் பணி நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக இப்பகுதி முழுவதும் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏராளமான போலீஸார் மற்றும் மருத்துவக் குழுவினர் பாதுகாப்பில் இப்பணி நடைபெற்றது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
