மதுரையில் சிஎன்ஜி தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

மதுரையில் சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எரிவாயு நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
நள்ளிரவு நேரத்திலும் ஆட்டோ மற்றும் கார்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால் ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
