போதுமான ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லாததால் 20 கிலோவுக்கு அதிகமான கஞ்சா வழக்குகளில் ஜாமீன் பெறுவோர் அதிகரிப்பு
போதிய ஆதாரங்கள் மற்றும் முறையான புலனாய்வு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், 20 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா வைத்திருந்த வழக்குகளில் ஜாமீன் பெறுவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படுவோருக்கு ஜாமீன் கிடைப்பது அதிகரித்துள்ளது. போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் (NDPS) கீழ், வணிக ரீதியான அளவில் (20 கிலோவுக்கு மேல்) கஞ்சா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
மதுரை உயர் நீதிமன்ற அமர்வு எல்லைக்குட்பட்ட 14 மாவட்டங்களில் இத்தகைய வழக்குகளில் போதிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் உரையாடல்கள், பணப் பரிமாற்ற விவரங்கள் மற்றும் இதர தொடர்புகளைப் புலனாய்வு அமைப்புகள் சரிவர வழங்காததே இதற்கு முக்கிய காரணம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
