ஒத்தக்கடை டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து, ரூ.7 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை திருமோகூர் அருகே உள்ள புதுதாமரைப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. ஊழியர்கள் கடையை மூடிவிட்டுச் சென்ற நிலையில், மர்ம நபர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
சுமார் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களைத் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒத்தக்கடை போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
