நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 கோடி முதலீடு செய்து ஏமாந்தவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மதுரையில் நிதி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், கோபிசன் எம்.எல்.ஏ. தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மதுரையைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நடுத்தர வர்க்கத்தினர் தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளனர். அருண்லால் என்பவர் ரூ.20 கோடி முதலீட்டு பணத்தைத் திருப்பித் தராமல் தலைமறைவானதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பணத்தைத் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, குறுஞ்செய்திகள் மற்றும் ஆடியோ மூலம் ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
