மதுரையில் சிறுவர்கள் ஓட்டிய பைக்குகள் பறிமுதல்
மதுரையில் சிறுவர்கள் பைக் ஓட்டிய விவகாரத்தில் 10-க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சிறுவர்கள் ஓட்டி வந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மதுரையில் காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கை நடைபெற்றது.
விதிமுறைகளை மீறும் சிறுவர்களின் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
