ETN News சமீபத்திய அப்டேட்கள்
Sembanarkovil · business

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை

செம்பனார்கோவில் விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆலை அதிபர்கள் பங்கேற்று பருத்தியை ஏலம் எடுத்தனர்.

இந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.10,010-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8,609-க்கும், சராசரியாக ரூ.9,100-க்கும் விற்பனையானது. மொத்தம் 2,000 குவிண்டால் பருத்தி ரூ.2 கோடிக்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட கூடுதல் விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்