மயிலாடுதுறையில் கஞ்சா விற்க முயன்ற இளைஞர் கைது
மயிலாடுதுறையில் 1.1 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை ரயிலடி காவிரி நகர் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 1.1 கிலோ கஞ்சா வைத்திருந்த சித்தரகாடு பெரிய தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார்(20) என்பவரை போலீஸார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
