சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் ஆடி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஆதி ராகு ஸ்தலமான ஸ்ரீ பொன்னாகவல்லி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோயிலில் ஆடி மாத பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
செய்தி மூலம்: ABP Nadu - Mayiladuthurai
