770 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வியாபாரி கைது
மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்ட 770 கிலோ புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை ரயிலடி கிட்டப்பா பாலம் அருகே தனிப்படை போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த நபரை சோதனையிட்டதில், அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
புதுக்கோட்டை அம்மாபட்டினத்தைச் சேர்ந்த இப்ராஹிம் (60) என்பவர் கும்பகோணத்தில் தங்கி புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரது கிடங்கில் சோதனை செய்த போலீஸார் அங்கிருந்த 770 கிலோ புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இப்ராஹிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
