ETN News சமீபத்திய அப்டேட்கள்
Mayiladuthurai · agriculture

மயிலாடுதுறையில் விவசாயிகள் நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்

பயிர்க் கடன் தள்ளுபடி மற்றும் காவிரி நீர் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் விவசாயிகள் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் விவசாயிகள் நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி நீரை முறையாகப் பெற்று மேட்டூர் அணையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்