நாகை நகராட்சி 33-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு
நாகை நகராட்சி 33-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை நகராட்சி 33-வது வார்டு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள புத்தூர் மற்றும் சாலமன் தோட்டம் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று தண்ணீர் எடுத்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். தங்களுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் நகராட்சி நிர்வாகத்திடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
