ETN News சமீபத்திய அப்டேட்கள்
Nagore · crime

நாகூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் கை துண்டானது

நாகூர் ரயில் நிலையத்தில் மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த வாலிபரின் கை சரக்கு ரயில் ஏறியதில் துண்டானது.

நாகூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் கை துண்டானது

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பீரோடும் தெருவைச் சேர்ந்தவர் சேக் முகமது (40). இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் நாகூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் கையை வைத்து படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த வழியாகச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது ஏறிச் சென்றதில் இடது கை துண்டானது. ரயில்வே போலீஸார் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்