போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
நாகையில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாகையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் 'போதை இல்லா நாகை' என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.
மாரியம்மன் கோயில் அருகில் தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, தம்பிதுரை பூங்கா மணிக்கூண்டு அருகில் நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
