கீழையூரில் திமுக ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் கீழையூரில், திமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் கீழையூரில், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக மாவட்டச் செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் முன்னிலை வகித்தார். இதில் திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
