ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது
நாகை அருகே லஞ்சம் வாங்கிய தேமங்கலம் ஊராட்சி செயலர் மோகன் லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நாகை அருகே உள்ள தேமங்கலம் ஊராட்சி செயலர் மோகன் (38), அதே ஊராட்சியைச் சேர்ந்த ராஜீ என்பவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜீ, நாகை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் செய்தார். இதனையடுத்து, போலீஸார் கொடுத்த ஆலோசனையின்படி நேற்று லஞ்சப் பணத்தைக் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீஸார் மோகனை கையும் களவுமாகப் பிடித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
