ETN News சமீபத்திய அப்டேட்கள்
Naduhatti · government

வீடு ஒதுக்கப்பட்டவர்களுக்கு மாறாக வேறு யாராவது இருந்தால் நடவடிக்கை - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் எச்சரிக்கை

வீடு ஒதுக்கப்பட்டவர்களுக்கு மாறாக வேறு யாராவது குடியிருப்புகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் எச்சரித்தார்.

வீடு ஒதுக்கப்பட்டவர்களுக்கு மாறாக வேறு யாராவது இருந்தால் நடவடிக்கை - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் நடுஹட்டி கெட்டிக்கம்பை பகுதியில் ரூ.22.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தகுதியான பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் மற்றவர்கள் யாராவது சட்டவிரோதமாகக் குடியிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்