புதுக்கோட்டையில் பேரிடர் மீட்புப் பயிற்சி
புதுக்கோட்டையில் பேரிடர் கால மீட்புப் பணிகளுக்காக 404 தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதுக்கோட்டையில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் 'இளம் பேரிடர் நண்பன்' என்ற தலைப்பில் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்த பயிற்சி வகுப்பு தொடங்கியது.
இந்த ஒரு வார கால பயிற்சியில் என்.சி.சி, என்.எஸ்.எஸ் மற்றும் நேரு யுவகேந்திரா அமைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 404 பேருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
