இந்திய வாலிபால் அணியில் புதுக்கோட்டை வீரர் சாதனை
புதுக்கோட்டையைச் சேர்ந்த வாலிபால் வீரர் ராஜகுருநாதன், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள பள்ளத்துவிடுதியைச் சேர்ந்த சிவகுரு-ராஜலட்சுமி தம்பதியின் மகன் ராஜகுருநாதன், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய வாலிபால் அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கோவை நேரு விளையாட்டு விடுதியில் பயின்று வரும் ராஜகுருநாதன், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர். இந்திய அணியில் தேர்வான அவரை முன்னாள் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பாராட்டினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
