கொப்பம்பட்டியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கொப்பம்பட்டியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொப்பம்பட்டியில் கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளத்தூர் வட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் டாஸ்மாக் உதவி மேலாளர் காமராஜ் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
