ஊருணியில் செத்து மிதக்கும் மீன்கள்: சாயல்குடியில் தொற்று நோய் பரவும் அபாயம்
சாயல்குடி ஊருணியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள ஊருணியில் ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதப்பதால் அப்பகுதி மக்கள் கடும் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊருணி முறையான பராமரிப்பு இன்றி மாசடைந்துள்ளதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊருணிக்குள் கழிவுகள் கலப்பதும் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக ஊருணியை தூர்வாரி, தண்ணீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
