ETN News சமீபத்திய அப்டேட்கள்
Thiruvadanai · district

ராமநாதபுரம்: பெருவாக்கோட்டை கிராமத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம், பெருவாக்கோட்டை கிராம மக்கள், குடிநீர் வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்: பெருவாக்கோட்டை கிராமத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திருவாடானை அருகே உள்ள பெருவாக்கோட்டை கிராம மக்கள் மனு அளித்தனர். இக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கிராமத்தில் புதிய குடிநீர் சேமிப்புத் தொட்டி கட்டப்பட்டும் அது பயன்படாமல் உள்ளது என்றும், குளத்திலும் தண்ணீர் இல்லாததால் விலைக்குத் தண்ணீர் வாங்கும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்குத் தேவையான குடிநீர் வசதியைச் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்