ETN News சமீபத்திய அப்டேட்கள்
Rameswaram · environment

கடல் அட்டை மீதான தடையை நீக்க மீனவர் சங்கம் வலியுறுத்தல்

பாரம்பரிய கடல் அட்டை சேகரிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஏஐடியுசி மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடல் அட்டை மீதான தடையை நீக்க மீனவர் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தின் பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் அட்டை சேகரிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க ஏஐடியுசி மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் செந்தில்வேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடல் அட்டைகள் பாரம்பரிய முக்குளித் தொழிலாளர்களின் முக்கிய வாழ்வாதாரமாகும். இவை சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதிலும், உலகளாவிய ஏற்றுமதி சந்தையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தொழிலில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் மனித உழைப்பு மட்டுமே சார்ந்துள்ளதால், பாரம்பரிய முறையிலான சேகரிப்புக்கு அறிவியல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதி வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்