ராமநாதபுரத்தில் சர்வதேச தரத்தில் செயற்கை இழை ஓடுதளம்
ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.12.35 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.12.35 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மைதானம் பள்ளமான பகுதியில் அமைந்துள்ளதால், தண்ணீர் தேங்காமல் இருக்க மண் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய கட்டத்தில் கான்க்ரீட் கட்டுமானம் மற்றும் வடிகால் வசதி பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் கூறுகையில், இந்த பணிகள் நிறைவடைந்ததும், இதே மைதானத்தில் இயற்கை புல் தளத்துடன் கூடிய கால்பந்து மைதானமும் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் உள்ளூர் வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை இங்கேயே பெற முடியும் என்றார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
