ETN News சமீபத்திய அப்டேட்கள்
Ramanathapuram · regional

தமிழகத்தில் ரூ.1,050 கோடி முதலீடு செய்ய பீனிக்ஸ் கோத்தாரி குழுமம் திட்டம்

தமிழகத்தில் ரூ.1,050 கோடி முதலீடு செய்ய பீனிக்ஸ் கோத்தாரி குழுமம் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலை அமைக்க பீனிக்ஸ் கோத்தாரி குழுமம் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, ஓசூரில் ரூ.50 கோடி செலவில் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் அந்த குழுமம் நிறுவவுள்ளது.

இந்த முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது.

← மேலும் மாவட்ட செய்திகள்