கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தங்களின் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பணியாளர்களுக்கு ஓய்வூதியம், கருணைத் தொகை உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். விருதுநகரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பேரணிகளைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகங்களில் பணியாளர்கள் மனு அளித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
