ETN News சமீபத்திய அப்டேட்கள்
Pamban · district

மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கிய பாம்பன் சாலை பாலம்

பாம்பன் சாலைப் பாலத்தில் போதிய மின் விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கிய பாம்பன் சாலை பாலம்

பாம்பன் சாலைப் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பெரும்பாலானவை எரியாததால், அப்பகுதி இரவில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

பாலத்தில் உள்ள 220 எல்.இ.டி விளக்குகளில் 25 சதவீதம் மட்டுமே தற்போது எரிவதாக பாம்பன் ஊராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரித்த இந்த விளக்குகளுக்கான மின் கட்டணத்தை ராமேசுவரம் நகராட்சி செலுத்தி வந்த நிலையில், தற்போது நிதியில்லா சூழலில் பராமரிப்பு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சாலைப் பாலத்தின் தொடக்கத்தில் உள்ள சுங்கச்சாவடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டதால், மின் கட்டணம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்