மீன்பிடியில் ஈடுபட்ட விசைப்படகு சிறைபிடிப்பு
நாட்டுப்படகு மீனவர்கள் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த விசைப்படகு மற்றும் 6 மீனவர்களை அதிகாரிகள் சிறைபிடித்தனர்.

தனுஷ்கோடி அருகே நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக விசைப்படகு ஒன்றை மீன்வளத்துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர்.
தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் மண்டபம் கடற்கரைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
