ETN News சமீபத்திய அப்டேட்கள்
Pamban · district

பாம்பன் விவேகானந்தர் மண்டபம் அருகே மனமகிழ் மன்றம் திறக்க எதிர்ப்பு: மீனவ மக்கள் ஆட்சியரிடம் மனு

ராமேசுவரம் பாம்பன் விவேகானந்தர் நினைவு மண்டபம் அருகே மனமகிழ் மன்றம் திறக்க அரசு அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பாம்பன் விவேகானந்தர் மண்டபம் அருகே மனமகிழ் மன்றம் திறக்க எதிர்ப்பு: மீனவ மக்கள் ஆட்சியரிடம் மனு

ராமேசுவரம் பாம்பன் பகுதியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் வழியில், தரவைத்தோப்பு கிராமத்தில் தனியார் மனமகிழ் மன்றம் (மதுக்கூடம்) திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். புனிதத் தலமான ராமேசுவரத்திற்கு வரும் ஆன்மிக யாத்ரீகர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த மனமகிழ் மன்றத்தைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்