வாலாஜா அருகே வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயிலில் நகை, பணம் திருட்டு
வாலாஜா அருகே வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயிலில் உண்டியல் மற்றும் தங்க கவசங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே வன்னிவேடு பகுதியில் உள்ள ஸ்ரீ புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் மர்ம நபர்கள் பீரோவை உடைத்து தங்க கவசம், நகைகள் மற்றும் உண்டியல் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கோயில் அர்ச்சகர் வந்து பார்த்தபோதுதான் திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வாலாஜா போலீஸார் வழக்குப்பதிவு செய்து தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
