சிஐஎஸ்எப் பயிற்சியில் போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர் மீது வழக்கு
அரக்கோணம் சிஐஎஸ்எப் பயிற்சி மையத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பயிற்சியில் சேர்ந்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மேகாலயாவைச் சேர்ந்த தேவசன் குமார் (23) என்பவர், போலி சாதிச் சான்றிதழைச் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர்களின் சான்றிதழ் சரிபார்ப்பின் போது இது தெரியவந்தது. இதையடுத்து, சிஐஎஸ்எப் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் தக்கோலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
