அங்கீகரிக்கப்படாத மையங்கள் குறித்து சென்னை பல்கலைக்கழகம் எச்சரிக்கை
சென்னை பல்கலைக்கழகம் தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் அங்கீகரிக்கப்படாத மையங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்கலைக்கழகத்தின் பெயரையோ அல்லது அதன் பிரதிநிதிகள் என்றோ கூறிக்கொண்டு செயல்படும் அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள், முகமைகள் மற்றும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சோளிங்கர் சாலையில் செயல்பட்டு வரும் 'ஆஸ்கார் ஆன்லைன் அட்மிஷன் சென்டர்' என்ற நிறுவனம், சென்னை பல்கலைக்கழகத்துடன் எந்தவித தொடர்பும் இன்றி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய அங்கீகரிக்கப்படாத மையங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
