சேலம் மாவட்டத்தில் ரூ.7.45 கோடியில் 15 புதிய கட்டிடங்கள் திறப்பு
சேலம் மாவட்டத்தில் ரூ.7.45 கோடி மதிப்பிலான 15 புதிய கட்டிடங்களை அமைச்சர் பார்த்திபன் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 15 புதிய கட்டிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டன. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் கலந்து கொண்டு கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. இதில் பெத்தநாயக்கன்பாளையம் ஆரியபாளையத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும் அடங்கும்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சிவானந்தம், மாவட்ட சுகாதார அலுவலர் யோகானந்த் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
