ETN News சமீபத்திய அப்டேட்கள்
Chennai · court

ஆயுள் தண்டனை கைதியை சிறை வார்டன்கள் கொடூரமாக தாக்கியதாக வழக்கு: சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சேலம் சிறையில் ஆயுள் தண்டனை கைதி கோபியை சிறை வார்டன்கள் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதியை சிறை வார்டன்கள் கொடூரமாக தாக்கியதாக வழக்கு: சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சேலம் மத்திய சிறையில் 32 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி கோபி (54) என்பவரை சிறை வார்டன்கள் கொடூரமாகத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோபி செல்போன் பயன்படுத்தியதாகக் கூறி, அவரது கைகளைப் பின்புறமாகக் கட்டி வைத்து சிறை வார்டன்கள் தாக்கியுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளியான கோபிக்குச் சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபியின் சகோதரர் ஹரிஹரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பி. புகழேந்தி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, இது குறித்து தமிழக அரசு மற்றும் சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 23-க்கு ஒத்திவைத்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்