சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத் திட்டத்தைத் தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் திட்டத்தைக் கண்டித்து, கோட்டை மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.
மாநகராட்சியின் இந்த முடிவால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஏற்கனவே இருந்த அரசு இத்திட்டத்தை முன்னெடுத்த நிலையில் தற்போதுள்ள அரசும் அதே நிலைப்பாட்டை எடுப்பது ஏற்புடையதல்ல என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
