பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2026-27-ஆம் கல்வி ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் நேற்று தொடங்கின. மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் மற்றும் இயக்குனர் சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். முதல் நாளில் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், முதலிடம் பிடிப்பவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
